வாச்சாத்தியில் பாலியல் பலாத்காரம் செய்யபப்ட்ட பெண் தேர்தலில் போட்டி
வாச்சாத்தி: தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினரால் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளாக்கப்பட்ட 18 பெண்களில் ஒருவரான அமுதா என்கிற அமரக்கா என்ற 35 வயதுப் பெண் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஊராட்சித் தலைவர் பதவிக்கு இவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வாச்சாத்தியில் கடந்த 1992ல் நடந்த பாலியல் அட்டூழியத்தில் சிக்கி சிதைக்கப்பட்டவர்கள் மொத்தம் 18 பெண்கள். இவர்களில் ஒருவரான அமுதா, பே.தாதம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இது பழங்குடியினப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவியாகும். வாச்சாத்தி கிராமம், இந்த ஊராட்சி எல்லைக்குள்தான் உள்ளது.
தலைவர் பதவிக்கு அமுதா தவிர தற்போதைய தலைவர் தனபாக்கியம் உள்ளிட்ட 5 பேர் களத்தில் உள்ளனர். மேலும் 12 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 42 பேர் போட்டியிடுகின்றனர்.
அமுதாவின் கணவர் பெயர் சுப்பிரமணியம். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தேர்தல் களம் காண்பது அமுதாவுக்கு இது முதல் முறையாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications