கைதான முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு திடீர் நெஞ்சு வலி- மருத்துவமனையில் அனுமதி!

நில ஒதுக்கீடு தொடர்பான ஊழல் விவகாரத்தில் சிக்கிய எதியூரப்பா மீது லோக் ஆஐயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் முன் ஜாமீன் கோரியிருந்தார் எதியூரப்பா. ஆனால் அதை லோக் ஆயுக்தா கோர்ட் தள்ளுபடி செய்து அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து லோக் ஆயுக்தா கோர்ட்டில் நேற்று சரணடைந்தார் எதியூரப்பா. அவரை அக்டோபர் 22ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண் 10462 கொடுக்கப்பட்து. 20க்கு 14 என்ற வசதியான அறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஒன்றே கால் மணியளவில் எதியூரப்பா வாந்தி எடுத்தார், நெஞ்சும் வலிப்பதாக தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் மூன்று முறை எதியூரப்பா வாந்தி எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை உடனடியாக ஜெயதேவா இருதவியல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
இருப்பினும் தற்போது அவரது நிலை சாதாரணமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதியூரப்பாவை கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
நாளை ஜாமீன் மனு
இதற்கிடையே, எதியூரப்பா சார்பில் நாளை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications