அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைப் பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுசேரி பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது, வங்க கடலின் வடக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள வங்க கடலில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, அந்த நிலை சுழன்று நிகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
மேட்டுப்பட்டியில் 7 செ.மீ., தாம்பரம், சிவகிரி, வால்பாறை, மதுரை திண்டுக்கல் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவானது. அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்யும், என்றார்.
புயல் சின்னம் குறித்து துறைமுகங்களுக்கு தகவல் தெரிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் கொடி ஏற்றப்பட்டு உள்ளதாக, துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications