கரூர் மாவட்டத்தில் 1,945 உள்ளாட்சி பிரநிதிகள் இன்று பதவியேற்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் 1,945 பேர் இன்று பதவியேற்க உள்ளனர்.
தமிழகம் முழுக்க கடந்த அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.
அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை உள்ளிட்ட 2 நகராட்சி தலைவர்கள், 72 நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ளனர். மேலும், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை உள்ளிட்ட 8 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 115 கவுன்சிலர்கள், 157 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,401 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
உப்பிடமங்கலம், புலியூர், புஞ்சை புகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, தமிழ்நாடு காகித ஆலை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், நங்கவரம் ஆகிய 11 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 171 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் 16 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்பட 1,945 பேர் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக உள்ளாட்சி அலுவலகங்களில் பிரமாண்ட பந்தல் அமைத்து, நல்ல நேரம் பார்த்து, மேள தாளம் முழுங்க பதவியேற்க உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications