லாட்டரி மார்ட்டினுக்கு குண்டாஸ்!
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலமோசடி செய்ததாக மார்ட்டின் மீது வழக்கு தொடரப்பட்டது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மார்ட்டினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
கோவையில் தங்கி சனிக்கிழமை தோறும் அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கோவை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட இன்று வந்தபோது, குண்டர் சட்டத்தில் (தேசிய பாதுகாப்பு சட்டம்) மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
தொன்னூறுகளின் இறுதியில் அதிமுக ஆட்சியில் செல்வாக்குடன் வலம் வந்தார் மார்ட்டின். கடந்த திமுக ஆட்சியின்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான நபராக மாறினார். கருணாநிதி கதை வசனத்தில் இரு படங்களையும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications