நாகர்கோவில்-சென்னை மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: நாகர்கோவில்-சென்னை மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 30ம் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 5.05 மணிக்கு சென்னை சென்ட்ரலை நோக்கி சிறப்பு ரயில் (06010) இயக்கப்படுகிறது. அந்த ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து அடையும்.
அக்டோபர் 31ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்(06009) இயக்கப்படும். அந்த ரயில் மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று நடக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications