கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அரசு பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்துகிறது: வைகோ
சென்னை: கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாத காங்கிரஸ் அரசு பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்தி மக்களை வதைக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர்வதை பெட்ரோல் விலை உயர்வு உணர்த்துகின்றது. கடந்த 10 மாத காலத்தில் மட்டும் 23 விழுக்காடு உயர்த்தி இருக்கின்றார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் மட்டும் 5-வது முறையாக உயர்த்தி இருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பரில் தான் லிட்டருக்கு 3.14 அதிகரிக்கப்பட்டது. 2 மாதங்களுக்குள்ளாக ரூ.1.80 உயர்த்துவதை, எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டின் பணவீக்க விகிதம் 9.72 விழுக்காடு ஆகவும், உணவுப் பொருள் பணவீக்கம் 12.21 விழுக்காடு ஆகவும் அதிகரித்து உள்ள நிலையில், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகின்றது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி இழப்பீட்டுத் தொகை மத்திய அரசு வழங்கி உள்ள நிலையில் அவை நட்டம் அடைவதாக எப்படிக் கூற முடியும்? 2 மாதத்தில் என்ன பெரிய நட்டம் வந்து விடப்போகின்றது?
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணையின் மாறுபாடு தான் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்றால் அண்டை நாடுகளான சீனாவில் பெட்ரோல் விலை இந்தியாவை விட 50 விழுக்காடு குறைவாகவும், பாகிஸ்தானில் 48 விழுக்காடு குறைவாகவும், பங்களாதேசத்தில் 52 விழுக்காடு குறைவாகவும் உள்ளதே? கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர இயலாத, காங்கிரஸ் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கின்றது. அடித்தட்டு ஏழை எளிய மக்களை உடனடியாகப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications