அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு: மீண்டும் கனமழை காத்திருக்கு!

வடகிழக்கு பருவமழையினாலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. அணைகள், ஏரிகள், குளங்கள் அணைத்தும் நிரம்பி வழிகின்றன.
சென்னையை அடுத்துள்ள புழல் ஏரி நிரம்பியுள்ளதால் அங்கிருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆற்றுநீர் வரும் கால்வாய் உடைந்ததை அடுத்து பொன்னேரி அருகே வடபெரும்பாக்கம் கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியில் ஏரி உடைந்ததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக விரோதிகள் யாரும் ஏரியை உடைத்து சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பவானி ஆறு மற்றும் மோயாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 85 அடி ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவகங்கை, தேவகோட்டை தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் வங்க கடலில் ஈரமான காற்றினை தமிழகத்தின் ஊடாக ஈர்ப்பதால் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications