பிரபல நாளிதழ் நிருபருக்கு அடி உதை: அதிமுக நிர்வாகி அட்டூழியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரபல நாளிதழ் ஒன்றின் நிருபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரபல நாளிதழ் ஒன்றில் முருகாண்டி என்பவர் நிருபராக பணியாற்றி வருகிறார். அவர் குண்டாறு ஆற்றங்கரை விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக ஒரு கட்டுரை எழுதினார். இது குறித்து அதிமுக நிர்வாகி செந்தூரானின் பெயரையும் முருகாண்டி குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செந்தூரான் காரில் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சென்று முருகாண்டியை தேடி உள்ளார். அப்போது முருகாண்டி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி அவர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த முருகாண்டி கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications