சேலம் திமுக நகர மன்ற தலைவர் காட்டுராஜா அதிமுகவில் இணைந்தார்
Subscribe to Oneindia Tamil
சேலம் : சேலம் புறநகர் மாவட்டம், நரசிங்கபுரம் திமுக நகர மன்ற தலைவர் காட்டுராஜா என்ற பழனிச்சாமி தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
சேலம் புறநகர் மாவட்டம், நரசிங்கபுரம் நகர மன்றத் தலைவர் காட்டுராஜா (எ) எம். பழனிச்சாமி. இவர் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேபோல் 6 வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க. உறுப்பினர் மாலா பாலமுருகன் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அப்போது, சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications