கிருஷ்ணகிரியில் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து 60 யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்த 60 யானைகள் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசப்படுத்தின.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொலமங்கலத்தில் உள்ள காட்டுப் பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்துவது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 60 யானைகள் கும்பலாக ஊருக்குள் புகுந்தன. கொத்தப்பள்ளி, சோடேகானேபள்ளி, குருபரபள்ளி உள்ளி்ட்ட ஊர்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருருந்த கரும்பு, சோளம், ராகி, நெல் ஆகிய பயிர்களை தின்றும், மிதித்தும் யானைகள் சேதப்படுத்தின. விவசாய நிலத்தின் நடுவே இருந்த ஆனந்தன் என்பவரின் வீட்டையும் யானைகள் இடித்து தள்ளின.
யானைகள் கூட்டமாக வந்ததால் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் செய்வது அறியாமல் தவித்தனர். கொத்தபள்ளியைச் சேர்ந்த ஆனந்தன், மல்லேஸ், மாரப்பன், பாப்பண்ணா ஆகியோருக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தின. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications