மு.க.அழகிரியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு
மதுரை: மதுரை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மு.க.அழகிரியின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி தேர்தல் விதியை மீறியதாகவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தாகவும் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.பி.மோகன் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது மோகன் இறந்துவிட்டார். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மு.க.அழகிரி பணம் பட்டுவாடா செய்தது குறித்து மதுரை மாநகர் சிபிஎம் மாவட்ட செயலாளரும், மதுரை தெற்குத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாதுரையும், பெரியகுளம் தொகுதியின் எம்எல்ஏ லாசரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
அப்போது மு.க.அழகிரி தரப்பில் வழக்கு குறித்த ஆவணங்களை தயார் செய்ய 2 வார கால அவகாசம் கேட்டனர். இதனால் நீதிபதி தனபால் இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications