தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் தர தயார்- கேரள அமைச்சர் ஜோசப் கூறுகிறார்
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் இருந்து இப்போது வழங்குவதை விட தமிழக அரசு கூடுதலாக தண்ணீர் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பி.ஜே ஜோசப் கூறியுள்ளார். அணை விவகாரம் குறித்த தமிழ்நாட்டுடன் பேச கேரளா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பி.ஜே.ஜோசப் பேசியதாவது,
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை என்பது கேரள மக்களின் பாதுகாப்பு தொடர்பானது. எனவே புதிய அணை கட்டும் முடிவில் இருந்து கேரளா ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. சமீபத்தில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. எனவே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விசயம்.
கூடுதல் தண்ணீர்
எங்களுடைய நிலைப்பாடானது கேரளத்துக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதுதான். அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச கேரளா தயாராகவே இருக்கிறது. தற்போது வழங்கும் தண்ணீரை விட தமிழக அரசு கூடுதல் தண்ணீர் கேட்டாலும் தருவதற்கு கேரளா அரசு தயாராக இருக்கிறது. இது பற்றி ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளலாம் இவ்வாறு கேரள பாசன துறை அமைச்சர் ஜோசப் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications