சென்னை வழியாக ஸ்ரீஹரிகோட்டா சென்றார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடி்யரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இன்று தனி விமானம் மூ்லம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் கோகுல இந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வரவேற்புக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்கல ஏவுதளத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இஸ்ரோ சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இன்றே அவர் டெல்லி திரும்புகிறார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications