பைன் மரதடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சாதனை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகம் பைன் மரத்தடிகள் இறக்குமதி செய்வதில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் கடந்த 1ம் தேதி எம்வி சூசடா நாரி என்ற கப்பலில் இருந்து 7839 மெட்ரிக் டன் எடையும், 8312 கன மீட்டர் அளவு கொண்ட பைன் மரத்தடிகள் இறக்குமதி செய்யப்பட்டது. இது பெருந்துறைமுகங்கள் அளவில் தேசிய சாதனை ஆகும்.

அதி நவீன உபகரணங்கள்

மரத்தடிகளை கையாள ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் வோல்வோ லாரிகளை உபயோகித்து இந்த சாதனை படைக்கப்பட்டது. மேலும் அதிக உற்பத்தி திறன் படைக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் அதிக பரப்பரளவு உள்ள திறந்தவெளி சரக்கு சேமிப்பு கிடங்கு வசதி துறைமுகத்தில் உள்ளதால் இந்த சாதனை படைக்கப்பட்டது. சென்னை மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதியாளர்கள் நியூசிலாந்து நாட்டிலிருந்து இந்த மரத்தடிகளை இறக்குமதி செய்துள்ளனர்.

இதற்குமுன் எம்வி ஆலம் செலங் என்ற கப்பலில் இருந்து 2011ல் கையாளப்பட்ட 6532 மெட்ரிக் டன் மரத்தடிகளை விட கூடுதலாக கையாண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+