கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது கல்வீசி இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை காடையர்கள் கற்களை வீசித் தாக்கியதால் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்ப நேரிட்டது.
தமிழக மீனவர்கள் மனம் போன போக்கில் தாக்குகிறார்கள், சுடுகிறார்கள் இலங்கைக் கடற்படையினர். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய அரசு கண்டு கொள்வதே இல்லை. இதனால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர் நமது மீனவர்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், கடலுக்குச் சென்ற 800க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகளை சூழ்நது கொண்டு கற்களால் வெறித்தனமாக தாக்கினர். கல்வீச்சிலிருந்து தப்ப மீனவர்கள் படகுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். பின்னர் அனைவரையும் மிரட்டி அங்கிருந்து போகுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் கரைக்குத் திரும்ப நேரிட்டது.












Click it and Unblock the Notifications