கள்ளக்காதலா என்று சந்தேகம்-கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொல்ல முயன்ற மனைவி
சேலம்: கணவருக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகித்த மனைவி தனது கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டார். இதில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் அங்கனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. 35 வயதாகிறது. இவரது மனைவி சித்ரா. இவருக்கு 32 வயதாகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார் சித்ரா. இதுகுறித்து கணவருடன் சண்டை போட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பெரியசாமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சித்ரா, பெரிய சட்டியில் எண்ணெயை காய்ச்சியுள்ளார். கொதிக்க கொதிக்க காய்ச்சிய பின்னர் அந்த எண்ணெயை எடுத்து கணவர் மீது ஊற்றியுள்ளார்.
இதில் தீக்காயம் அடைந்த பெரியசாமி அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்போர் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவீத தீக்காயமடைந்துள்ளார் பெரியசாமி என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சித்ரா மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்குத் திருமணமாகி 10 வருடங்களாகிறதாம். இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சித்ரா இப்படிச் செய்து விட்டது இரு குடும்பங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications