கோவில்பட்டியில் கல்லூரி மாணவி முகத்தில் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகை பறிப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் கல்லூரி மாணவி முகத்தில் மிளகாய் பொடித் தூவி பைக் கொள்ளையர்கள் 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகள் பாரதி. அவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படிதது வருகிறார். கோவில்பட்டி டவுனில் உள்ள சென்டரில் பாரதி டியூஷனுக்கு மொபட்டில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு டியூஷன் முடிந்து பாரதி மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மேற்கு காவல் நிலையம் அருகே வந்தபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் திடீரென அவரை முந்திச் சென்றனர். அவர்கள் முந்தும்போது பாரதியை காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழவே அந்த நபர்கள் பாரதியின் வாயை பொத்தி முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். அதன்பிறகு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைய பறிக்கவே பாரதி திருடன், திருடன் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.
உடனே மேற்கு காவல் நிலைய போலீசார் சிலர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த அந்த நபர்கள் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்றனர். இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுதது முறைப்படி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். சம்பவம் நடந்த இடம் எங்கள் பகுதி கிடையாது. அது திருவேங்கடம் போலீஸ் எல்லைக்கு உட்ப்பட்டது அங்கு புகார் செய்யுங்கள் என்றனர்.
உடனே பாரதியி்ன் பெற்றோர் செல்போன் மூலம் திருவேங்கடம் போலீசில் தொடர்பு கொண்டு திருட்டை கூறினர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications