ராணுவ தளபதியின் வயசு விவகாரம்: கருத்து கூற அந்தோணி மறுப்பு
கொச்சி: ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது விவகாரத்தில் மத்திய அரசின் முரண்பாடான நிலைப்பாட்டை விமர்சித்தது தொடர்பாக கருத்து கூற பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி மறுத்துவிட்டார்.
கொச்சியில் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கருத்து எதனையும் தெரிவிக்க முடியாது என்றார்.
ராணுவத்தின் நிர்வாகத்தில் 2 பிரிவுகளில் தமது பிறந்த தேதி வயது முரண்பாடாக இருப்பதால் மாற்றம் செய்ய வேண்டும் என்று வி.கே.சிங் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் முறையீடு செய்திருந்தார்.
இந்த கோரிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்தது.
இதையடுத்து வி.கே.சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வி.கே.சிங் வழக்கு விசாரணையில் மத்திய அரசு முரண்பாடான தகவல்களைத் தெரிவித்தது. இதையடுத்து வி.கே.சிங்கின் உண்மையான பிறந்த தேதியை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்திருநதது.












Click it and Unblock the Notifications