9ம் தேதி பெங்களூர் கோர்ட்டுக்கு வருகிறார் சசிகலா... 'பேசுவாரா'?

கடந்த பல ஆண்டுகளாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, சசியின் அண்ணி இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நிலுவை + இழுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நேரில் ஆஜராகி 4 நாட்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது இந்த சொத்துக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது அத்தனை புகார்களும் சசிகலா உள்ளிட்டோர் மீது திரும்பியுள்ளது. பெங்களூர் விசாரணைக்குப் பின்னர்தான் ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் இடையே பெரும் பிரளயம் ஏற்பட்டு பிரிந்தனர். சசிகலா குடும்பமே கூண்டோடு நீக்கப்பட்டது
இந்த நிலையில் வருகிற 9ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜராக வேண்டியுள்ளது. அன்றைய தினம் அவர் வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஆவணங்களை தமிழில் கேட்டு சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. இதனால் 9ம்தேதி சசிகலா கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அன்று அவர் திட்டமிட்டபடி ஆஜராவாரா, ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா, அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா பிரிந்த பின்னர் சென்னையிலேயே ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். அவர் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் பெங்களூர் கோர்ட்டில் இப்படித்தான் பேச வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அவர் அனுப்பி வைக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications