மிசாவையே பார்த்துட்டோம்... பொய் வழக்கையா சமாளிக்க முடியாது? – மு க ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
தூத்துக்குடி: மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். திமுகவினர் மீது போடப்படும் பொய்வழக்குகளை சட்டரீதியாக எப்படி சந்திப்பது என்று எங்களுக்குத் தெரியும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வில் பங்பேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

கழக தொண்டர்கள் மீது, மாவட்ட கழக செயலாளர்கள் மீது, கழகத்தின் செயல் வீரர்கள், மூத்த உறுப்பினர்கள் மீதெல்லாம், ஏராளமான பொய் வழக்குகளை போட்டு, பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து, ஒரு சாதாரண வழக்கில் இருந்து குண்டர் சட்டம் வரையிலே, திமுகவினர் மீது இந்த ஆட்சி போட்டுக்கொண்டிருக்கிறது. திமுகவினர் மீது தொடரப்பட்டு வரும் பொய் வழக்குகளை முறியடிப்போம் என்றார்.

மிசாவையே பார்த்தவர்கள்

மிசாவையே பார்த்தவர்கள் நாம். எனவே எந்த வழக்குகள் போட்டாலும், எந்த கொடுமைகளை நமக்கு உருவாக்கித் தந்தாலும், எந்தவிதமான சோதனைகளை ஏற்படுத்தி தந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாமல், நாம் தொடர்ந்து நமது பணத்தை கலைஞர் தலைமையில் நடத்திக்கொண்டிருக்கிறோம். நெருக்கடி நிலையையே எதிர்கொண்ட திமுக, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். திமுகவை அழிக்க நினைப்போரின் எண்ணம் நிறைவேறாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+