பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர்: போலீசார் வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

குலசேகரபட்டிணம்: குலசேகரபட்டிணத்தில் பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குலசேகரப்பட்டினம் அனுகுலபுரத்தைச் சேர்ந்தவர் மோசஸ்ராஜன். அவரது மகள் கிருபா ஜெயசீலி. அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 13ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாய் பாக்கிய செல்வி குலசேகரப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். புகாரில் குலசேகரபட்டிணம் மங்களாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ஜேசுபாலன் ரஜினி, தனது மகளை கடத்திச் சென்றதாக கூறியிருந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இசக்கி வழக்குப் பதிவு செய்தார். திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீகலா, பால்ஐசக் ஆகியோரது தலைமையில் இருவரையும் மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஜேசுபாலன் ரஜினி, கிருபா ஜெயசீலியை எங்கு கடத்திச் சென்றார், எதற்காக கடத்திச் சென்றார் என்று விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.

ஜேசுபாலன்ரஜினி குலசேகரபட்டிணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் போதகராகவும் உள்ளார். பள்ளி மாணவியை ஆசிரியர் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+