சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : 61 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – கூடுதல் பாதுகாப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் 61 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 242 வாக்கு சாவடிகள அமைக்கப்பட உள்ளன. இதில் 61 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 12 வாக்கு சாவடிகளும், சங்கரன்கோவில் யூனியனில் புளியம்பட்டி, களப்பாகுளம், செந்தட்டி, நெடுங்குளம் ஆகிய 5 வாக்குசாவடிகளும், மேலநீலிதநல்லூர் யூனியனில் கடையாலுருட்டி, வேலப்பாநாடானூர், கடம்பன்குளம், திருமலாபுரம், சேர்ந்தமங்கலம், குலசேகரமங்கலம், வென்றிலிங்கபுரம், பெரியகோவிலான்குளம், குருக்கள்பட்டி, சொக்கநாச்சியாபுரம், அச்சம்பட்டி, மேலநரிக்குடி, கூவாச்சிபட்டி, தேவர்குளம், ஜமீன்இலந்தைகுளம், ஆகிய 19 வாக்கு சாவடிகளும், பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல் குருவிகுளம் யூனியனில் கீழநீலிதநல்லூர், மலையான்குளம், பெருங்கோட்டூர், செவல்குளம், கள்ளிகுளம், ஆலடிபட்டி, சம்சிகாபுரம், கலிங்கப்பட்டி, பாறைப்பட்டி, இளையரசனேந்தல், மைப்பாறை, குருவி்குளம், வடக்கு குருவிகுளம், கே ஆலங்குளம், வாகைகுளம், கீழ அழகுநாச்சிபுரம், வடக்கு அழகுநாச்சிபுரம், அழகனேரி, வெங்கடாசலபுரம், சாயமலை ஆகிய 25 வாக்கு சாவடிகள் என மொத்தம் 61 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications