ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை: மும்முரமாக செயல்படுத்த அமெரிக்கா மும்முரம்

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறியதாவது:
ஈரானின் கச்சா எண்ணெய்யை இந்தியா, பாகிஸ்தான், ரசியா, சீனா ஆகிய நாடுகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடையை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தக உறவை மேற்கொண்டுள்ள அனைத்து நாடுகளுடனும் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் பெறுவதை தவிர்க்குமாறு இந்நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு அமைக்கும் பணியை தொடரப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். இத்திட்டம் சரியானது அல்ல என்பது எங்களது கருத்து. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசுடன் பேசி வருகிறோம்.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
இந்தியா, ஜார்ஜியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமது நாட்டு தூதர்களை குறிவைத்து ஈரான் ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
சம்பவ இடங்களில் கிடைக்கக் கூடிய கை ரேகைகள் ஈரானின் ஆதரவை அம்பலப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும் விசாரணைக்கு உதவி கோரியுள்ள நாடு எது என்பதை குறிப்பிட விரும்பவில்லை என்றார் அவர்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலக நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரானோ அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குத்தான் பயன்படுத்துவதாக கூறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications