நடராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

தஞ்சை விளாரில் ராமலிங்கம் என்பவரின் 14 ஆயிரம் சதுர அடி நிலத்தை மிரட்டி நடராஜன் அபகரித்ததார் என்பது புகார்.
இப்புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் நடராஜன்.
அரசியல் உள்நோக்கம்
நடராஜனுக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞர் மலர்விழி தனது வாதத்தின் போது கூறியதாவது:
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா ஆஜராகி வருகிறார்.
சசிகலாவுடன் இருந்து அவருக்கு ஆதரவு தந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் நடராஜன் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது என்றார் அவர் .
ஜாமீன் மனுதள்ளுபடி
இந்த வாதத்தை நிராகரித்து நில அபகரிப்புப் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி நடராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நடராஜனுடன் குற்றம் சாட்டப்பட்ட சின்னய்யா, குபேந்திரனுக்கும் ஜாமீன் தரப்படவில்லை.
நடராஜன் சகோதரர் சாமிநாதனின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் வைத்து நடராஜனை விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்..
மலர்விழி யார்?
நடராஜன் வழக்கறிஞராக ஆஜரான மலர்விழி, அதிமுகவில் முன்னாள் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.
தற்போது நடராஜனுக்காக வழக்கில் ஆஜரானதும் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications