பிஎஸ்என்எல்லின் கையடக்க கணிணி... விலை ஜஸ்ட் ரூ 3250!

பான்டெல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு ரூ3,250, ரூ10,999 மற்றும் ரூ 13,500 ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மிகக் குறைந்த மாடலான "T-PAD IS701R"-ல், 2ஜிபி மெமரியும் 256எம்பி ராமும் கொண்டது. இந்த 2ஜிபியை 32ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.
அடுத்த மாடல் "T-Pad WS704C". இது 512MB DDRIII ராம் கொண்டது. இதை தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
விலை உயர்ந்த மாடல் "T-PAD WS802C". 1.2ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் கொண்டது.
இவை 7 முதல் 8 இஞ்ச் வரையிலான திரையுடன் ஆண்ட்ராய்ட் 2.3 ஐ ஆபரேடிங் சிஸ்டமாகவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே மத்திய அரசு ஆகாஷ் கையடக்க கணிணிகளை இதைவிட குறைவான விலைக்கு உருவாக்கி இருந்தாலும் பயன்பாடு ரீதியான பி.எஸ்.என்.எல். தயாரிப்பு முக்கியத்துவம் பெறும் என்பது சந்தை வல்லுநர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications