நாகர்கோவில் அருகே வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் ரூ.1.80 லட்சம் கொள்ளை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவரின் வீட்டிற்குள் புகுந்து ரூ.1.80 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை அருகே உள்ளது கே.ஆர். புரம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் தெதயுன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி மேக்ளின் (45). அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு மேக்ளின் தனது குழந்தைகளுடன் தூத்தூரில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு சென்றுள்ளார். திருவிழாவில் இருந்து வீட்டுக்கு வந்த அவர் வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1.80 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மேக்ளின் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications