நக்சல் பாதித்த பகுதிகளில் ரூ. 800 கோடியில் 400 காவல் நிலையங்கள்: முதற்கட்டமாக ரூ.120 கோடி ஒதுக்கீடு
டெல்லி: நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 400 காவல் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. அதற்காக முதல் கட்டமாக ரூ. 120 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
நக்சலைட்டுகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள 83 மாவட்டங்களை உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. அந்த மாவட்டங்களில் தலா ரூ.2 கோடி செலவில் 400 காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.120 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பீகாரில் 85 காவல் நிலையங்களும், சத்தீஸ்கரில் 75ம், ஜார்க்கண்டில் 75ம், ஒடிஷாவில் 70ம், மேற்கு வங்கத்தில் 18ம், மத்திய பிரதேசத்தில் 12 காவல் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. இது தவிர ஆந்திராவில் 40ம், உத்தர பிரதேசத்தில் 15ம் மற்றும் மகாராஷ்டிராவில் 10 காவல் நிலையங்களும் கட்டப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் காவல் நிலையங்களுக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கும், மீதமுள்ள 20 சதவீதத்தை அந்தந்த மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் நக்சலைட்டுகளின் தாக்குதல்களில் 447 பொது மக்களும், 142 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் தவிர மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள 78 மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications