அணு உலை திட்டத்துக்கு எதிராக நிதியுதவி-ஜெர்மன் நபர் நாடு கடத்தல்: சென்னை ஹோட்டலில் சோதனை

நாகர்கோவிலில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சோன்டெக் ரெய்னர் ஹெர்மன் என்ற நபர், அணு உலை போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் உதயகுமாருடன் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பில் இருந்ததும் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவரது ஹோட்டல் அறையை சோதனையிட்ட மத்திய உளவுப் பிரிவினரான இன்டலிஜென்ஸ் பீரோ அதிகாரிகள், சில ஆவணங்களையும் கைப்பற்றினர். அவர் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூடி விவாதித்து அவரை நாடு கடத்த முடிவு செய்தனர். இதையடுத்து ரெய்னர் ஹெர்மானை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு, தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்தைக் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து சென்னை போலீசார் நாகர்கோவில் விரைந்து நாகர்கோவில் கோர்ட் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு கைது செய்தனர்.
பிறகு அவரை சென்னை அழைத்து வந்தனர். சென்னையில் ரெய்னர் ஹெர்மானிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் நேற்றிரவு 2 மணிக்கு ஹெர்மான் ஜெர்மன் செல்லும் விமானத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி அனுப்பப்பட்டார். அவர் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
முன்னதாக இவர் குறித்த சந்தேகம் வந்தவுடன், இவரது தொலைபேசி அழைப்புகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications