தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், கடலூர், சேலம் மாவட்டங்களில் தான் சாலை விபத்துகள் அதிகம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 13,035 பேர் உயிரிழந்துள்ளனர். 2010ம் ஆண்டில் 15,240 பேர் பலியாகியுள்ளனர். விழுப்புரம், வேலூர், கடலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.
தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால் இதனை தொடங்கி வைத்து பேசுகையில்,
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றனது. ஆண்டுக்கு 66,000 விபத்துகள் நடக்கின்றன.
தனியார் வாகன டிரைவர்கள் கண்விழித்து நீண்ட நேரம் வாகனங்களை ஓட்டுவதும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு பணி நேரத்தை நிர்ணயம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி 13,035 பேர் உயிரிழந்துள்ளனர். 2010ம் ஆண்டில் 15,240 பேர் பலியாகியுள்ளனர். விழுப்புரம், வேலூர், கடலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications