இடைத்தேர்தல்: எந்த போலீசுக்கும் 30ம் தேதி வரை லீவு கிடையாது: ஏடிஜிபி ஜார்ஜ் உத்தரவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள 230 பூத்களில் 103 பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளது. மேலும் வரும் 30ம் தேதி எந்த போலீசுக்கும் விடுமுறை கிடையாது என்று ஏடிஜிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு 230 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 103 பூத்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தற்போது 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரன்கோவிலுக்கு வந்து செல்லும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாகனங்கள், லாட்ஜிகளுக்கு வந்து செல்லும் நபர்கள் ஆகியவற்றை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக தொகுதிக்கு வரும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் சங்கரன்கோவிலில் 10 சர்வர்லைன் டீம், 10 பறக்கும் படையினர், 10 வீடியோ போலீஸ் படையினர், 5 அதிரடிப் படையினர், மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த 9வது மற்றும் 12வது பட்டாலியனை சேர்ந்த 4 கம்பெனி போலீசார், 3 கலவர தடுப்புப் படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மாநில உளவுத் துறையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி முதற்கட்டமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 650 வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் ஒரு வாரத்தில் சங்கரன்கோவிலுக்கு வர உள்ளனர். இந்நிலையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட வந்த ஏடிஜிபி ஜார்ஜ் பின்னர் மதுரையில் தென்மண்டல எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் சங்கரன்கோவில் தேர்தலில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தவும், தென்மாவட்ட எஸ்.பி.க்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் காவல்துறையில் சாதாரண போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை யாருக்கும் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகரத்திலிருந்து முதல்கட்டமாக ஆயுதப்படை போலீசார் மற்றும் காவல் நிலையங்களில் இருந்து 300 போலீசார், 100 ஊர்காவல் படையினர், 100 என்சிசி மாணவர்கள் ஆகியோர் சங்கரன்கோவிலுக்கு செல்ல இருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications