ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு: கிராமமே மூழ்கி 39 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியான பாதக்ஷான் மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு கிராமமே மூழ்கியதில் அதில் வாழ்ந்த 200 பேரில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடவேற்கு மலைப் பகுதியான பாதக்ஷான் அந்நாட்டிலேயே மிகவும் வருமையான மாகாணம் ஆகும். ஆண்டில் குறைந்தது 6 மாதங்களாவது அங்கு கடும் பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் மாகாணத் தலைநகரான பைசாபாத் அருகே உள்ள சிறிய கிராமமமான ஷெரின் நாசிம் பனியில் மூழ்கியது. இதில் அந்த கிராமத்தில் வாழ்ந்த 200 பேரில் 39 பேர் பலியாகியுள்ளனர், 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமைடந்தவர்கள் தஜிகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தஜிகிஸ்தானில் இருந்து உணவு, மருந்து மற்றும் போர்வைகள் வந்துள்ளன. ஆனால் அவை போதுமானதாக இல்லை.
பாதக்ஷானில் இந்த ஆண்டு மட்டும் பனிப்பொழிவால் 60 பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications