சசிகலா உறவினர் ராவணன் விடுதலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
கோவை: ரூ.2 கோடி மோசடி வழக்கில் இருந்து ராவணன் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சசிகலா உறவினர் ராவணன் மீது ரூ.2 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 28ம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது.
எனவே அன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மறுநாள் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். இதனை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்து, ராவணனை ரூ.2 கோடி மோசடி வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரிக்கு வந்தது. அப்போது ராவணன் மீது பல வழக்குகள் உள்ளதால், பல நீதிமன்றங்களுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் ரூ.2 கோடி மோசடி வழக்கில் அவரை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. இந்த விளக்கத்தை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து, ராவணன் காவலை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராவணனை விடுவித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications