குடியாத்தம் எம்.எல்.ஏவை ரூமுக்குள் போட்டுப் பூட்டிய மர்ம நபர்- யார்?
குடியாத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ லிங்கமுத்து வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம ஆசாமி, எம்.எல்.ஏ அறையைப் பூட்டி விட்டு சில பொருட்களைத் திருட முயன்றான். ஆனால் எம்.எல்.ஏவின் மகள் கத்தியதால் அந்த ஆசாமி தப்பி விட்டான். அந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு என ஒரே அக்கப்போராக இருக்கிறது. இந்த நிலையில் குடியாத்தத்தில் சிபிஐ எம்.எல்.ஏவின் வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம ஆசாமி, எம்.எல்.ஏ இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு துணிகரமான திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளான்.
குடியாத்தம் அருகே உள்ள செட்டிகுப்பம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் லிங்கமுத்து. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு முத்தமிழ் என்ற மகள் உள்ளார். இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
லிங்கமுத்து நேற்று கட்சி பணி காரணமாக வெளியே சென்று விட்டு நள்ளிரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார். பின்னர் லிங்முத்து அவரது மனைவி ஒரு அறையிலும், மகள் முத்தமிழ் மற்றொரு அறையிலும் தூங்கினர்.
அதிகாலை 3.30 மணிக்கு பின்பக்க கிரில் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தான். எம்.எல்.ஏ. அறைக்குள் சென்று நகை-பணம் இருக்கிறதா? என்று தேடி பார்த்துள்ளான். அவர்தான் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவாச்சே, எதுவும் சிக்கவில்லை. இதனால் அங்கிருந்த செல்போனை மட்டும் எடுத்துக் கொண்டான்.
பின்னர் வெளியே வந்து எம்.எல்.ஏ. தம்பதி தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினான். பின்னர் எம்.எல்.ஏவின் மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் புகுந்தான். அங்கு பீரோவைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று உருட்டியுள்ளான். சத்தம் கேட்டு முத்தமிழ் கண் திறந்து பார்த்துள்ளார். அப்போது யாரோ நிற்பதைப் பார்த்து பயந்து போய் அலறினார்.
மகள் அலறலைக் கேட்டு லிங்கமுத்து கண்விழித்து ஓடி வந்தார். ஆனால் அறை பூட்டியிருந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. அதற்குள் திருடன் ஓடி விட்டான்.
பின்னர் முத்தமிழ் வந்து கதவைத் திறந்து விடவே எம்.எல்.ஏ வெளியே வந்தார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
யார் அந்த ஆசாமி என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications