பிரபாகரன் மகனை சுட்டுக் கொல்லவில்லையாம், சொல்கிறார் காரியவாசம்!

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் வரலாறு காணாத கொடூரக் கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் அந்த நாட்டின் இனவெறி ராணுவம் அரங்கேற்றியது. இதுதொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகி விட்டன.
இந்த நிலையில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை கொடூரமாக கொலை செய்தது தொடர்பான ஆதாரத்தை சேனல் 4 டிவி நிறுவனம் நாளை வெளியிடவுள்ளது. அதில் பாலச்சந்திரனை மிக நெருக்கத்தில் வைத்து ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ படத்தைக் காண உலக மக்கள் பதைபதைப்புடன் காத்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோக் காட்சிகளை இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வீடியோக் காட்சிகளும் சரி, அதில் உள்ளதாக கூறப்படுவதும் சரி உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. அவை இட்டுக்கட்டியவை. இதைஎங்களிடம் முன்பே கொடுத்து உறுதிப்படுத்தவில்லை அவர்கள். இது பத்திரிக்கை தர்மம் அல்ல. இது உள்நோக்கம் கொண்ட வீடியோ.
பாலச்சந்திரன் இறந்திருக்கலாம். ஆனால் அவன் கொல்லப்பட்டான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இல்லை. இந்தப் புகாரை மறுக்கிறோம்.
போரின்போது 8000 பேர் இறந்தனர். அவர்களில் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர். அவர்கள் போரில்தான் இறந்தனர், கொலை செய்யப்படவில்லை.
தற்போது வெளியாகியுள்ள செய்தி இலங்கையின் நன்மதிப்பைக் கெடுக்கும் முயற்சியாகும் என்றார் காரியவாசம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications