பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை இலக்கு ரூ.30,000 கோடியாக குறைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 2012-2013ஆம் ஆண்டில் ரூ30 ஆயிரம் கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி, 2011-2012ஆம் ஆண்டில் பங்கு விற்பனை மூலம் ரூ40 ஆயிரம் கோடி நிதிதிரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ14 ஆயிரம் கோடியை மட்டுமே திரட்ட முடிந்தது என்றார்.
மேலும் 2012-2013ம் ஆண்டிலும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ30 ஆயிரம் கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கடந்த ஆண்டு செயில், பெல், ஆயில் இந்தியா மற்றும் கடைசியாக ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தது.












Click it and Unblock the Notifications