தேர்வு எழுத அனுமதிக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை: சக மாணவர்கள் சாலை மறியல்
சென்னை: தேர்வு எழுத அனுமதிக்காததால் மனமுடைந்த பாலிடெனிக் மாணவர் வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மாந்தார குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ(18). அவர் சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.
ஜெயப்பிரகாஷ் சரிவர வகுப்புகளுக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. இதனையடுத்து பாலிடெனிக் தேர்வில் பங்கேற்க கல்லூரி நிர்வாகம் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மற்ற மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் இன்று காலையில் வகுப்புகளை புறக்கணித்து தரமணியில் உள்ள ராஜீவ்காந்தி நெடுஞ்சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அடையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications