மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 16 சி.ஆர்.பி.எப். படையினர் பலி

Subscribe to Oneindia Tamil

Maoist
மும்பை: மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி 16 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.

192வது பட்டாலியன் ரிசர்வ் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஒரிசா மாநிலம் கந்தமால்-கஞ்சம் மாவட்ட எல்லையில் 2 இத்தாலியர்களை அண்மையில் கடத்திச் சென்று ஒருவரை மட்டும் விடுவித்துள்ளன்ர்.

ஒரிசா-ஆந்திர மாநில எல்லையில் கோரபுட் மற்றும் மல்காங்கி மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக மாவோயிஸ்டுகள் ட் ஹாக்குதலை நடத்தி வருகின்றனர். மேலும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜிஹா ஹிகாவையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கருக்கு இடைப்பட்ட கட்சிரோலி மாவட்டத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாவட்டத்தில் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய மிகப்பெரும் தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எப். படையினர் கொல்லப்பட்டதே மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+