முத்துக்குமரன் மறைவுக்கு தா.பாண்டியன் இரங்கல்: பாட்னாவில் இருந்து விரைகிறார்
பாட்னா: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் விபத்தில் பலியானதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும்,கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், புதுக்கோட்டை மாட்டச் செயலாளருமான தோழர் எஸ்பி.முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தோழர் முத்துக்குமரன் மின்னல் போலத்தோன்றி ஒளி பரப்பி கரி போல் விழுந்துவிட்டது கட்சிக்கு மிகுந்த வேதனையளிக்கிறது, கவலையளிக்கிறது.
சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நற்பணியாற்றி, நற்பெயர் பெற்றவர் இளம் தோழர் முத்துக்குமரன். அவரது இழப்பால் மிகுந்த துயரமுற்றுள்ள அவரது துணைவியாருக்கும், அவரது மகன் நரேனுக்கும், மகள் நர்மதாவிற்கும் எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.
அவரது துணைவியாருக்கும் ,மகனுக்கும், மகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியின் கொடி தமிழகம் முழுவதும் மூன்று தினங்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவதற்காக தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட நாங்கள் பாட்னாவில் இருந்து விமானத்தில் விரைந்து வந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications