இலங்கை சிவன் கோவிலுக்குள் புகுந்து தமிழர்களை தாக்கி சிங்கள ராணுவம் அடாவடி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வழிபடும் சிவன் கோவிலிலுக்குள் புகுந்து சிங்கள ராணுவ வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை அவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வருகின்றனர்.

இலங்கை கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான தமிழர்கள் வருவார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அந்த கோவிலுக்குள் அதிரடியாகப் புகுந்து கருவரை அருகே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த ஆண், பெண் பக்தர்களை அடித்து விரட்டினர். பிறகு அர்ச்சகரிடம் சென்று கோவிலுக்குள் பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது, அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர்.

அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கோவிலை இடித்து தரைமட்டமாக்கிவிடுவோம் என்றும் மிரட்டனர். இதையடுத்து கோவில் முன்பு ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் சாமி கும்பிட வரும் பக்தர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சிவன் கோவிலுக்கு செல்ல அஞ்சுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை விரட்டவே ராணுவம் இப்படி செய்வதாக தமிழ் அமைப்பினர் தெரிவி்ததனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+