கோரிக்கையை ஏற்காவிட்டால் கடும் விளைவுகள்- எம்.எல்.ஏவை கடத்திய மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை

ஒரிசாவின் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜிஹா ஹிகாவை கடத்திச் சென்ற ஆந்திர- ஒரிசா மாநில எல்லைப்பகுதி மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
தங்களுக்கு எதிரான பசுமைவேட்டையை நிறுத்த வேண்டும், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி சிறையில் உள்ள அப்பாவி பழங்குடி இன மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கை.
இக்கோரிக்கையை நிறைவேற்ற்வே தாங்கள் எம்.எல்.ஏ.வை கடத்தியிருப்பதால் கோரிக்கைகளை உடனே ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரபுட் மாவட்ட செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்த 3-வது கடிதத்தில் மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு அலட்சியம் காட்டினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அதில் மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே மாவோயிஸ்டுகளுடன் பேச்சுநடத்த முன்வருமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஒரிசா பழங்குடி அமைப்பு நிராகரித்துள்ளது. இதனால் மாவோயிஸ்டுகள் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்று ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications