கிருஷ்ணாபுரம் கோயிலில் டம்மி குண்டு: போலீசார் மீது மக்கள் அதிருப்தி
நெல்லை: பாளை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இது குறித்து போலீசார் துப்பு துலக்காமல் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி கோயிலில் பாலிதீன் பையில் கிடந்த 2 வெடிகுண்டுகளை கடந்த 29ம் தேதி போலீசார் கைப்பற்றினர். அவற்றை சிவந்திப்பட்டி காட்டுப்பகுதிக்குள் எடுத்துச் சென்று சோதனையிட்டபோது ரப்பர் புஷ்கள் மற்றும் கிழிந்து போன சிறிய அட்டைகள் இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு ஒத்திகையி்ன் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் அதில் சதி திட்டம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் சீலக்காரி மற்றும் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணாபுரம் கோயிலில் இரு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவரை போலீசில் சிக்க வைக்க டம்மியாக வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை போலீஸ் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக இருந்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications