கொசுவை சுடுவதற்கு பீரங்கி தேவையில்லை: உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 239வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அவர்கள் மத்தியில் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது,
போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் உழைக்கும் மக்களுக்காக பாடுபடக் கூடியவர்கள் வரவில்லை என்பது பெரிய குறையாக இருந்தது. ஆனால் அதை போக்கும் வகையில் நல்லக்கண்ணு தலைமையில் பொதுவுடமை கட்சியினர் வந்திருப்பது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடவேண்டும் என்பது தான் எங்களது ஒரே கோரிக்கையாகும். இது அமெரிக்கா போன்ற வெளிநாட்டுக்காரர்கள் பணம் கொடுத்து நடத்தப்படும் போராட்டம் அல்ல.
தமிழக அரசு தொடக்கத்தி்ல் நமது சார்புடையவர்கள் போல் ஒரு நிலை எடுத்துவி்ட்டு இன்று நமக்கு எதிரான செயல்பாட்டை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மீனவ மக்கள், தலித், முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் இந்த போராட்டம் நடக்கிறது. எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்களுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. இந்த நாட்டுக்கு மின்சாரம் கிடைக்கக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் கொசுவை சுடுவதற்கு பீரங்கி தேவையில்லை. அணு உலையினால் ஒரு விபத்து நடந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மக்களை காவு கொடுத்து பெறும் மின்சாரம் தேவையில்லை. இன்று மத்திய, மாநில அரசுகளை ஒரு சேர எதிர்க்கிறோம். போராட்டததில் கைது செய்யப்பட்ட 18 பேர் விடுவிக்கப்பட்டனர். சுதிஷ், முகிலன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் நக்சலைட் ஆதரவாளர்கள் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்படியானால் தமிழகத்தில் நக்சலைட்டுகள் இருக்கிறார்களா என முதல்வர் சொல்ல வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் நினைத்தால் அணு உலையை முற்றுகையிட முடியும். போலீசாரின் துப்பாக்கிக்கு பயப்பட மாட்டோம். அதை விட மக்கள் சக்தி தான் பெரியது. அணு உலையை மூடும் வரை அறவழி போராட்டம் தொடரும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications