For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்ப் புத்தாண்டு.. லீவாவது கிடைச்சதே..: விஜய்காந்த்!

By Chakra
Google Oneindia Tamil News

vijayakanth and sarath kumar
சென்னை: விலைவாசி உயர்ந்து வரும் இந்த நாளில் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஆசை இருந்தாலும், ஏழைகளுக்கு கொண்டாடும் நிலைமை இல்லை. இருந்தாலும் விடுமுறை கிடைத்ததாலும், ஓய்வு கிடைத்ததாலும் நிம்மதி தானே. அந்த வகையிலாவது எல்லா மக்களும் இந்த தமிழ்ப் புத்தாண்டை இனிதே கொண்டாட வாழ்த்துகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்திரை முதல் நாளாம் இந்த தமிழ்ப்புத்தாண்டில் உலகமெல்லாம் உள்ள தமிழ் மக்கள் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் அனைத்து நலன்களும் தமிழ் மக்களுக்கு கிடைத்திடவும், இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு இன்னல் தீர்ந்து வருங்காலம் இனிதாக அமைந்திடவும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்ந்து வரும் இந்த நாளில் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஆசை இருந்தாலும், ஏழைகளுக்கு கொண்டாடும் நிலைமை இல்லை. இருந்தாலும் விடுமுறை கிடைத்ததாலும், ஓய்வு கிடைத்ததாலும் நிம்மதி தானே. அந்த வகையிலாவது எல்லா மக்களும் இந்த தமிழ்ப் புத்தாண்டை இனிதே கொண்டாட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தை திங்கள் முதல் நாள்தான்... ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில், தமிழ்ப் புத்தாண்டு தை திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.

சித்திரை முழு நிலவு நாளில்தான் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் தீமைகள் அகன்று, உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த சித்திரை திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

சரத்குமார் 'ஜிங்கிச்சா':

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மீண்டும் சித்திரை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டு தினமாக இந்த ஆண்டு முதல் அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உழவர் பெருவிழா நாளாகக் கொண்டாடி, விவசாயப் பெருமக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி தமிழகத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்டிருப்பதும் இன்றைய தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகம், வேளாண்மைத் துறை மட்டுமல்லாது, கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வியத்தகு வளர்ச்சி பெற்று, தமிழக மக்கள் மகிழ்வோடும், சிறப்போடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
Leaders of various political partiles including Vijaykanth, Ramdoss, Sarath Kumar have extend Tamil new year wishes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X