2011-12ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய்: அமைச்சர்

மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் நத்தம் விசுவநாதன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது,
மதுபான விற்பனையை தனியார் விற்பனை செய்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக சில்லரை விற்பனை செய்யும் உரிமையை அரசுக்கு முழுவதும் சொந்த நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்கு வழங்குவது என்று 2003ம் ஆண்டு துணிச்சலான முடிவை அரசு எடுத்தது.
இதன் மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு அரசு வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
2003-2004-ம் ஆண்டு ரூ.3639.93 கோடி, 2004-2005-ம் ஆண்டு ரூ.4872.03 கோடி, 2005-2006-ம் ஆண்டு ரூ.6030.77 கோடி, 2006-2007-ம் ஆண்டு ரூ.7473.61 கோடி, 2007-2008-ம் ஆண்டு ரூ.8821.16 கோடி, 2008-2009-ம் ஆண்டு ரூ.10601.50 கோடி, 2009-2010-ம் ஆண்டு ரூ.12498.22 கோடி, 2010-2011-ம் ஆண்டு ரூ.14965.42 கோடி, 2011-2012-ம் ஆண்டு ரூ.18081.16 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது.
தரமான உயர்தர மதுபானங்களை தயாரிப்பதற்கு தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் தானியங்களை கொண்டு சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகள் எதுவும் இல்லை.
எனவே உயர்தர மதுபானம் தயாரிக்க தேவைப்படும் சாராவி தனியார் நிறுவனங்களால் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டில் தானியங்களை அடிப்படையாக கொண்டு சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகளை அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications