For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஸ்வரூபமாய் எழும் "இரட்டைக் கோபுரம்"

By Mathi
Google Oneindia Tamil News

World Trade Center
நியூயார்க்: அல் கொய்தா பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தகர்க்கப்பட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இதில் 2500 பேர் பலியாகினர்.

சரித்திரத்தின் சோகமாகிப் போன உலக வர்த்தக மையத்தை உள்ளடக்கிய அந்த இரட்டைக் கோபுரத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 1270 அடி உயரத்தில் ஒரு கட்டிடமும் 1776 அடி உயரத்தில் மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 1250 அடி உயர கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளது.

1776 அடி உயர கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இது 104 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய கட்டிடம் மூலம் அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இரட்டைக் கோபுரம் பெற உள்ளது.

1931-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்பையர் கட்டிடம்தான் 1545 அடி உயரத்துடன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

English summary
One World Trade Center, being built at the site of the fallen twin towers, surpassed the Empire State Building on Monday as the tallest building in New York. Construction crews set in place a steel horizontal beam at a height of about 1,270 feet (387 meters), topping by about 20 feet (six meters) the rooftop of the observation deck of the Empire State Building, which stands about 3 miles (4.8 km) to the north in Midtown Manhattan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X