பெண் உதவியாளரிடம் பாலியல் பலாத்காரம்: கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது
சென்னை: சென்னையில் தம்மிடம் உதவியாளராக இருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு மெக்னிக்கல் சாலையில் அந்தோணி ஜான்மில்டன் என்பவரை இயக்குநராகக் கொண்டு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மீது பல புகார்கள் ஏற்கெனவே கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் ஜான்மில்டன் மீது பாலியல் பலாத்கார புகாரைத் தெரிவித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், கடந்த வாரம் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தம்மிடம் தவறாக நடக்க முயற்சித்தார். ஆனால் அவரிடம் தப்பியோடிய என் மீது மயக்க ஸ்பிரே அடித்து சீரழித்தார். இதேபோல் ஒருவாரத்தில் 4 முறை தம்மை பாலியல் பலாத்காரம் செய்தார் ஜான்மில்டன் என்று கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அந்தோணி ஜான்மில்டன் நேற்று இரவு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். பாலியல் புகார் கூறியுள்ள பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications