கருணாநிதி தலைமையில் திமுக வக்கீல்கள் கூட்டத்திற்கு அழைப்பு!

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதும் உள்ள கழக முன்னணியினரை பழிவாங்குவதையே முக்கிய பணியாகக் கொண்டு பொய் வழக்குகளை புனைந்தும் - போலீஸ் படையைக் கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிலக்கச் செய்யலாம் எனக் கனவு கண்டு அதனை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் கே.பி.சங்கர், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கைது செய்தும் கே.பி.சங்கரின் மனைவியை நள்ளிரவில் வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றும், உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் மீது பொய் வழக்குகளை தொடுத்து, அவர் குடும்பத்தையே அழித்து விடும் முயற்சியில் இந்த அ.தி.மு.க. அரசு ஈடுபட்டு, காவல் துறையை திட்டமிட்டு ஏவி விட்டிருக்கிறது.
இதுபோன்ற அ.தி.மு.க. அரசின் போக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்திட தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. அதுபோது தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications