நித்தியானந்தாவை நாங்கள் ஆதரிக்கவில்லை-சங்கர மடம்
காஞ்சிபுரம்: நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்த செயலை காஞ்சி சங்கர மடம் ஆதரிக்கவில்லை. இதுதொடர்பாக நித்தியானந்தா கூறியிருப்பது தவறான தகவல் என்று காஞ்சி சங்கர மடம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை திருஞான சம்பந்தர் மடத்தின் 293-வது ஆதீனமாக சுவாமி நித்யானந்தாவை, 292-வது ஆதீனம் நியமித்துள்ளார். இதற்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
சுவாமி நித்யானந்தா நியமனத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எந்தவித ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரியப்படுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தில் நித்தியானந்தா பேட்டி அளித்தபோது, என்மீதான புகார் சர்ச்சையில் இருந்து போரூர் ஆதீனம் விலகி விட்டார். எனக்கு ஆதரவாக காஞ்சி பெரியவர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், காஞ்சிப் பெரியவர், அசோக்சிங்கால், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி உள்பட 40 பெரிய சமூக அரசியல் தலைவர்கள் நட்புடன் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
மேலும் மாதா அமிர்தானந்த மயியும் தனக்கு ஆதரவு தருவதாக கூறியிருந்தார். இதை உடனடியாக அமிர்தானந்த மயி மடம் மறுத்திருந்தது. தற்போது சங்கர மடமும் மறுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications