நித்தியானந்தா நியமனம் அதிர்ச்சி தருகிறது-சைவ வேளாளர் சங்கம்

தஞ்சையில் மாவட்ட சைவ வேளாளர் சங்கத்தின் சிறப்புக்கூட்டம் நடந்தது. தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதி பதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்தது, சைவ ஆன்மிக பெருமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தா நியமனம் என்பது சைவ மரபு, நடைமுறை, சைவ நெறி, ஆதீன சம்பிரதாயங்கள் என, அனைத்தையும் மீறி, சமய நெறிகளை அறியாதவரும், உணராதவரும், குற்றப் பின்னணி உடையவருமான நித்யானந்தாவை நியமனம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த செயல், வரும் சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் நடந்த அனைத்து ஆதீன மடாதிபதிகளின் கூட்ட முடிவுப்படி, சைவ வேளாளர் சங்கத்தின் தீர்மானப்படியும் நித்தியானந்தாவை மடாதிபதியாக நியமனம் செய்ததை, 10 நாளில் திரும்பப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications